காற்று மாசுவினால் இந்தியாவில் 12 லட்சம் பேர் இறப்பு சர்வதேச ஆய்வு முடிவு மத்திய அரசு நிராகரிப்பு

புதுடெல்லி: காற்று மாசு காரணமாக நாட்டில் 12 லட்சம் பேர் இறந்ததாக கூறும் சர்வதேச ஆய்வறிக்கை முடிவை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நிராகரித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஹெல்த் எபெக்ட் இன்ஸ்டியூட் என்ற நிறுவனம் காற்று மாசு குறித்த தனது ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு காற்று மாசுவினால் 12 லட்சம் பேர்  இறந்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையின் முடிவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நிராகரித்துள்ளார்.

ஹர்ஷ் வர்தன் தற்ேபாது டெல்லியில் சாந்தினி சவுக் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். ஆய்வு முடிவு குறித்து பேட்டி அளித்த அவர், “காற்று மாசுவை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு கடுமையாக மேற்கொண்டு வருகின்றது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகின்றது. காற்று மாசுவை சமாளிப்பதற்கான  நடவடிக்கை அரசு முன்னெடுத்து வருகிறது. நாட்டில் 12 லட்சம் பேர் காற்று மாசுவினால் இறந்ததாக கூறும் ஆய்வு முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஆய்வுகள் பீதியை ஏற்படுத்துவதை  குறிக்கோளாக கொண்டுள்ளன” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: