துபாய்: கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதி அரேபியாவின் முதல் பெண் மாடல் தலிதா தாமெர் சர்வதேச அளவில் புகழ்பெற்று இத்துறையில் கலக்கி வருகிறார். சவுதி அரேபியா கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு. இங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், தற்போதைய மன்னரின் உத்தரவுகளால், பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.இந்த சூழ்நிலையில், மாடல் துறையிலும் பெண்கள் களமிறங்க ஆரம்பித்துள்ளனர். சவுதி அரேபியாவின் முதல் பெண் மாடல் என்ற பெயரை பெற்றவர் தலிதா தாமெர். இவர் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் பிறந்து பிரிட்டீஷ் கல்விக் கூடத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை அய்மான் தாமெர் பிரபல தொழிலதிபர். இவர் அழகுச் சாதன பொருட்களுக்கான நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது தாயார் கிறிஸ்டினா தாமெர், இத்தாலியின் பிரபல நடன கலைஞர். இவரும் பேஷன் துறையில் ஆர்வமுடையவர்.