பாடகி எஸ்.ஜானகிக்கு இடுப்பு எலும்பு முறிவு: உறவினர் வீட்டில் தவறி விழுந்தார்

மைசூரு: புகழ்பெற்ற  பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார்.  இவரது உறவினர் வீடு  மைசூருவில் இருக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு  முன் மைசூருவிற்கு வந்த எஸ்.ஜானகி உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கு  குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் கால்  தவறி கீழே விழுந்தார். இதில்  அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு  முறிவு ஏற்பட்டது. இதற்காக அவரை மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை  செய்தனர்.  இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘ஜானகிக்கு  இடுப்பு எலும்பில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் அவர் முழுமையாக குணமடைவார்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: