துப்பாக்கியால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது அரசு - நக்சலைட்கள் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் : அன்னா ஹசாரே அறிவிப்பு

அகமத்நகர்: ‘‘ அரசுக்கும், நக்சலைட்களுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருக்கிறேன்,’’ என  சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகன் சித்தியில் அன்னா ஹசாரே நேற்று அளித்த பேட்டி: ஒவ்வொருக்கும் பிரச்னைகள் உள்ளன. அந்த பிரச்னைகளுக்கு சரியான வழியில்தான் தீர்வு காண வேண்டும். வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச்சூடு, வன்முறை போன்ற நடவடிக்கைகள் மூலம் அப்பாவிகளின் உயிர்களை பறிப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியாது. துப்பாக்கியால் மட்டும் எல்லா பிரச்னைக்கும் தீர்வு ஏற்பட்டு விடாது. துப்பாக்கி மற்றும் வன்முறைகள் பிரச்னைகளை மேலும் தீவிரமாக்குமே தவிர அது பிரச்னைக்கு தீர்வாக அமையாது.

நக்சலைட்கள் பிரச்னையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும் என்பது எனது கருத்து. இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு முன்வர வேண்டும். நான் இந்த நாட்டையும், மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். அதனால், நக்சலைட்கள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண, அரசுக்கும் நக்சலைட்களுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: