ஐபிஎல் டி20; குவின்டன் டி காக் அதிரடி: ஐதராபாத் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது மும்பை இண்டியன்ஸ்

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இண்டியன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் ஆடி, அவற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி 12 போட்டிகளில் ஆடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இப்போட்டியில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் 3-ம் இடத்திற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: