73 ஆண்டுகளில் 4 பெண்கள் மட்டுமே ஐநா பொதுசபையின் தலைவராக நியமனம்

நியூயார்க் : கடந்த 73 ஆண்டுகளில் 4 பெண்கள் மட்டுமே ஐ.நா.பொது சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி மற்றும் பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்குவதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு சபையே ஐக்கிய நாடுகள் சபை. ஐ.நாவின் பொதுசபை (General Assembly) நியூயோர்க்கில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 24.10.1945 உருவாக்கப்பட்டது. இன்றுடன் ஐக்கிய நாடுகள் சபைக்கு 73 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இந்நிலையில் கடந்த 73 ஆண்டுகளில் 4 பெண்கள் மட்டுமே ஐ.நா.பொது சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

 ஐ.நா. பொது அவை கூட்டத்தில் பங்கேற்று பேசிய, இந்தியாவைச் சேர்ந்த அஞ்சனி குமார் ஐ.நா. பொது அவையின் முதல் பெண் தலைவராக 1953ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி பண்டிட் நியமனம் செய்யப்பட்டு இருந்ததை சுட்டிக் காட்டினார். தற்போதைய தலைவராக பெண் ஒருவர் இருப்பது திருப்தி அளிக்கிறது எனினும் கடந்த 73 ஆண்டுகளில் 4 பெணகள் மட்டுமே ஐ.நா.பொது சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று அவர் தெரிவித்தார். 1953ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி பண்டிட் ஐநாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருந்தார். 1969ம் ஆண்டு லைபீரியாவை சேர்ந்த புரூக்ஸ் ஐநாவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2006ம் ஆண்டு பஹ்ரைனை சேர்ந்த ஹயா ரஷீத் கலீபா நியமனம் செய்யப்பட்டு இருந்தார். தற்போது ஈக்வடாரை சேர்ந்த மரியா ஃபெர்னாண்டோ எஸ்பினோஸா ஐநாவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: