ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம் கைதான 8 பேரையும் காவலில் எடுக்க முடிவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக அரசு மருத்துவமனை செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அமுதவள்ளி, கூட்டுறவு சங்க ஊழியரான அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் உள்பட 8பேரை, போலீசார் கைது ெசய்துள்ளனர்.  ராசிபுரம் தனிப்படை போலீசார் மற்றும் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் கொல்லிமலை மற்றும் பள்ளிபாளையத்தை சேர்ந்த 18 பச்சிளம் குழந்தைகள் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து,  இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ராசிபுரம் தனிப்படை போலீசார் இந்த வழக்கில் கைப்பற்றிய ஆவணங்கள், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் பெறப்பட்ட சுமார் 800 பக்க ஆவனங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது, இந்த வழக்கை விசாரிக்க சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் இன்ஸ்பெக்டர் சாரதா, நாமக்கல் இன்ஸ்பெக்டர் பிருந்தா உள்பட 7பேர், இந்த சிறப்பு விசாரணைகுழுவில் இடம் பெற்றுள்ளனர். சிபிசிஐடி போலீசார், குழந்தைகள் விற்பனை வழக்கில் சிறையில் உள்ள 8 பேரையும், காவலில் எடுத்து இன்னும் ஓரிரு நாளில் விசாரிக்க உள்ளனர். இதனால், இந்த வழக்கில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: