இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கூடுதலாக பறக்கும் படைகள்: மதுரை புதிய கலெக்டர் நாகராஜன் அறிவிப்பு

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பெண் தாசில்தார் உள்ளிட்ட 4 பேர் அத்துமீறி நுழைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, மதுரை கலெக்டர் நடராஜன் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பொது சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் நாகராஜன் மதுரையின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். மதுரை புதிய கலெக்டராக அவர் நேற்று பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2 முக்கியமான பணிக்காக வந்துள்ளேன்.

மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. அதை எவ்வித பிரச்னையின்றி நடத்தி முடிக்கவும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முறையாக நடத்தவும் முழுமையான பணிகளை செய்ய உள்ளேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க திருப்பரங்குன்றம் தொகுதியில் 9 பறக்கும்படை குழுக்கள் இயங்கி வருகிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இன்னும் கூடுதலாக குழுக்கள் அமைக்கப்படும்.

தற்போதுதான் பொறுப்பு ஏற்றுள்ளதால், தேர்தல் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, கலெக்டர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நடராஜன் நேற்றுகாலை அரசு விருந்தினர் விடுதியில், புதிய கலெக்டர் நாகராஜனிடம் தனது பொறுப்புகளை ஓப்படைத்துவிட்டு, 11.30 மணி விமானத்தில் சென்னை சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: