போலீசாரின் வேனில் வாக்காளர்களுக்கு உணவு சப்ளை ‘வெல்டன்’ ஜம்மு காஷ்மீர் போலீஸ்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் என, மூன்று பிராந்தியங்களை கொண்டது. காஷ்மீரில், மூன்று தொகுதிகள், ஜம்முவில், இரண்டு; லடாக்கில் ஒரு தொகுதி ஆகியன உள்ளன. இந்தத்  தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்து வரும் நிலையில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அனந்த்நாக் தொகுதியில் கடந்த 23ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.  நாளை குல்காம் தொகுதியில் வாக்குப்பதிவும், சோபியான், புல்வாமா பகுதிகளில் அடுத்த மாதம் 6ம் தேதி 3ம் கட்டமாக வாக்குப்பதிவும் நடக்கவுள்ளது. இந்த தொகுதியில் பிடிபி கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர்  மெகபூபா முப்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜ சார்பில் சோபி யூசப், காங்கிரஸ் சார்பில் ஹசன் மிர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், நேற்றுடன் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் முடிந்த குல்காம் பகுதியில், வாக்காளர்களுக்கு ேபாலீஸ் வேனில் உணவு பொட்டலம் வழங்கிய வீடியோ வைரல் ஆகியுள்ளது. அன்றையதினம் பாஜ மூத்த தலைவர் ராம் மாதவ் தலைமையில் நடந்த பேரணியின் போது, போலீஸ் வேனில் வைத்து உணவு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. தேர்தல் விதிமுறையை மீறி போலீஸ் வேனில் உணவு பொட்டலம் வழங்கியது ெதாடர்பான வீடியோ வைரல் ஆனதால், தேர்தல் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வெல்டன் ஜம்மு - காஷ்மீர் போலீஸ்’ என்று கிண்டல் அடித்து பாஜவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: