ஆஸி. பெண் நடுவர் போலோசாக் சாதனை

ஆண்கள் கிரிக்கெட் அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் போட்டியில் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற சாதனை, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளேர் போலோசாக்குக்கு (31 வயது) கிடைத்துள்ளது. ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 தொடரில் நேற்று நமீபியா - ஒமான் அணிகள் மோதிய போட்டியில் அவர் நடுவராகக் களமிறங்கி இந்த பெருமையை பெற்றார்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், ஆண்கள் அணிகள் மோதிய ஆட்டத்துக்கு இவர் முதல் முறையாக 2017ல் நடுவராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 15 மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 2018ல் நடந்த ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதியிலும் நடுவராகப் பணியாற்றி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: