கவுதம் கம்பீருக்கு 2 இடத்தில் ஓட்டு; அரசியலுக்கு வந்ததுமே வம்பு

பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் பாஜ.வில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அரசியலில் நுழைந்ததுமே அவர் மீது கல்லடி, சொல்லடி விழ தொடங்கி விட்டது.  டெல்லியில் உள்ள ராஜேந்திரா நகர், கரோல்பாக் ஆகிய 2 இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் கம்பீரின் பெயர் இடம் பெற்று இருப்பதாக அவரை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி மர்லினா குற்றம்சாட்டி இருக்கிறார்.

குற்றம் சாட்டியது மட்டுமின்றி, காம்பீர் மீது டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கும் தொடர்ந்துள்ளார் அதிஷி. அவர் தனது மனுவில், ‘ஒருவர் 2 இடங்களில் வாக்காளராக பெயரை பதிவு செய்வது குற்றம். எனவே, காம்பீரின் வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒருவர் 2 இடங்களில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டதை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்தால் ஓராண்டு  சிறை தண்டனை விதிக்க முடியும். இந்த குற்றச்சாட்டுக்கு காம்பீர் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: