பீகார் மாநில பிரசாரத்துக்கு முன் ராகுல்காந்தி சென்ற விமானம் பழுது: மீண்டும் டெல்லி திரும்பியதால் பரபரப்பு

புதுடெல்லி: பீகார் மாநில தேர்தல் பிரசாரத்துக்கு விமானத்தில் ராகுல் சென்ற போது, விமானம் பழுதானதால், அவர் மீண்டும் டெல்லி திரும்பினார். மகாராஷ்டிரா மாநிலத்தில், 17 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 29ம் தேதி  வாக்குப்பதிவு நடக்கிறது. நான்காம் கட்டமாக நடக்கும் இந்த தேர்தலுக்கான பிரசாரம் நாளை (சனிக்கிழமை) ஓய்கிறது. மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் பாஜ - சிவசேனா கூட்டணி கட்சிகள் தலா 3 தொகுதிகளில்  போட்டியிடுகின்றன. இவர்களை ஆதரித்து பிரசார செய்ய பிரதமர் மோடி இன்று மும்பை வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசாவின் பலசோர் மற்றும் மகாராஷ்டிராவின் சங்கம்னர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால்,  இன்று காலை டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் கட்சியின் முக்கிய தலைவர்களும் உடன் சென்றனர். ஆனால், விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும்  டெல்லிக்கே திரும்பி வந்துள்ளது. இத்தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘சமஸ்திபூர் (பீகார்), பலசோர் (ஒடிசா) மற்றும் சங்கம்னர் (மகாராஷ்டிரா) ஆகிய இடங்களில் பிரசாரம் பின்னர்  நடைபெறும்; சிரமத்திற்கு வருந்துகிறேன்’ என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: