இலங்கை வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி : 39 நாடுகளின் விசா சலுகை தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பால் அங்கு பதற்றம் நீடித்து வரும் நிலையில், விசா சலுகையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், சொகுசு உணவகங்கள் உட்பட 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 253 பேர் உயிரிழந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர தற்கொலை தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 11 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலை கத்தோலிக்க தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் 39 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா சலுகையை இலங்கை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா, பாதுகாப்பு கருதி சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இந்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டுச் சதி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார். இதனால் இலங்கையின் விசா வசதிகளை தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை என்பதால் குறிப்பிட்ட 39 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வந்து விசா பெற்றுக் கொள்ளும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: