வுஹான்: ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் வுஹான் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் மகளிர் பிரிவின் 2வது சுற்று ஒன்றில் நேற்று இந்தியாவின் சாய்னா நெஹ்வால், கொரியாவின் கிம் கா எவுன் ஆகியோர் மோதினர். இதில் 38 நிமிடங்களில் சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட்களில் கிம்மை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப் பெற்றார். இதேபோல் இன்னொரு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், இந்தோனேஷியாவின் சொய்ருன்னிசாவும் மோதினார். சுமார் 33 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் சிந்து 21-15, 21-19 என்ற நேர் செட்களில் சொய்ரூன்னிசாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.