ஐபிஎல் டி20; தினேஷ் கார்த்திக் விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா

கொல்கத்தா: இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயம் செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: