சூளகிரி அருகே 14ம் நூற்றாண்டு கோயில் கண்டுபிடிப்பு

சூளகிரி:  கிருஷ்ணகிரி  மாவட்டம் சூளகிரி -வேப்பனப்பள்ளி சாலையில் கங்கசந்திரம் கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர்  கொடுத்த தகவலின் அடிப்படையில்,   அறம் கிருஷ்ணன், ராசு, உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  அங்கு 14ம் நூற்றாண்டை சேர்ந்த  பாழடைந்த கோயில் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அறம்  கிருஷ்ணன் கூறுகையில், `கோயிலின் கட்டிடக்கலையை வைத்து பார்க்கும்போது  13 அல்லது  14ம் நூற்றாண்டை சேர்ந்ததாக வாய்ப்பிருக்கிறது.  இதில், அரசும், தொல்லியல் துறையும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று  தெரிவித்தார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: