‘தீதி’மாநிலத்தை திவாலாக்கிட்டார்:பாஜ தலைவர் அமித்ஷா விமர்சனம்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா ஆட்சியின் கீழ் மாபியாக்களின் ராஜ்ஜியம் நடந்து வருவதாக பாஜ தலைவர் அமித்ஷா விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தின் உலுபேரியாவில் நடந்த பாஜ மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கட்சியின் தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அமித்ஷா பேசியதாவது:மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மாபியா ராஜ்ஜியத்தை நடத்தி வருகின்றது.

 பசு கடத்தலில் இந்த மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பான இடமாக  மேற்கு வங்கம் இருக்கிறது. மம்தா பானர்ஜி மாநிலத்தை திவாலாக்கும் நிலையை உருவாக்கியுள்ளார். அவரது உறவினர்களும் கட்சியின் அமைச்சர்களும் தான் நன்கு வளமாகி வருகின்றனர். 42 இடங்களில் 23 இடங்களில்  பாஜவை வெற்றி பெற செய்யுங்கள். அடுத்த 90 நாட்களில் அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் வணிக ராஜ்ஜியத்தை முடிவுக்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: