மோடியை திருடன் என கூறிய விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

டெல்லி: பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக சொன்னதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மோடி குறித்து தாம் கூறியது அரசியல் எதிரிகளால் தவறாக பரப்பப்படுவதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, பரப்புரையில் வேகத்தில் மோடியை பற்றி அவதூறு கூறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடியை நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டது என கருத்து கூறினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ரபேல் குறித்த உத்தரவில் மோடியை பற்றி நீதிபதி எதுவுமே கூறாத நிலையில், அவர் பேச்சை ராகுல் திரித்துக் கூறியுள்ளார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

மேலும், இது நீதிமன்ற அவமதிப்பு எனவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா எம்பி மீனாட்சி லேகி, ராகுல் காந்தி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கை  விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் 22 ஆம் தேதிக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக சொன்னதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். ராகுல் வருத்தம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததை அடுத்து ரபேல் வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: