உடுமலை அருகே எக்ஸ்பிரஸ் மோதி ஸ்டேஷன் மாஸ்டர் பலி

உடுமலை:  பழநியை சேர்ந்தவர் கண்ணன்(55). இவர் உடுமலை - பழநி ரயில்வே மார்க்கத்தில் மைவாடி ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் பணியில் இருந்தபோது  மாலை 6.30 மணியளவில் மதுரையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி  சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், மைவாடி ரயில் நிலையத்தை கடந்து சென்றது. அந்த ரயிலுக்கு ஸ்டேஷன் மாஸ்டர் கண்ணன் பச்சை கொடி காட்டினார். அப்போது அவர் அருகில் பெண் பணியாளர் ஒருவரும் இருந்தார். ரயில் கடந்து சென்றதும் கண்ணனை காணவில்லை. இதையடுத்து உடன் இருந்த பெண், அவரை தேடினார். அப்போது ரயில் தண்டவாளத்தில் கண்ணன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ரயில்வே போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், ‘அதிவேகமாக சென்ற ரயிலுக்கு பச்சை கொடி காட்டி திரும்பியபோது கண்ணன் ரயில் பெட்டி மோதி தண்டவாளத்தில் விழுந்து பலியானது’ தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: