முதல் இடத்துக்கு முந்துமா மும்பை தடை போடுமா ராஜஸ்தான்

ஜெய்பூர்: ஐபிஎல்  தொடரில் ராஜஸ்தானுடன் மோதும் மும்பை அணி வெற்றிப் பெற்றால் சென்னையை பின்னுக்கு தள்ளி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு  முன்னேறும்.ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டி இன்று மாலை ஜெய்பூரில் நடைபெறுகிறது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் 2வது முறையாக மோத  உள்ளன. ராஜஸ்தான் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வென்று 7வது இடத்தில் உள்ளது.பெங்களூர்  அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெற்றதுதான் முதல் வெற்றி. அடுத்து மும்பை அணியை  4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது 2வது வெற்றி.   அந்த மும்பை அணியுடன் இன்று ராஜஸ்தான் மோத உள்ளது.இந்த 2 அணிகளும் ஐபிஎல் தொடர்களில் இதுவரை 20 முறை மோதியுள்ளன. அதில் மும்பை 10 முறையும், ராஜ்தான் 9 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. ஒருப் போட்டி  கைவிடப்பட்டது. அதிலும் கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வென்றுள்ளது.

Advertising
Advertising

அணியில் நட்சத்திர வீரர்கள் இருந்தும் பெரிய அளவில் வெற்றிகளை குவிக்க முடியாமல் தவித்து வருகிறது ராஜஸ்தான். ஆனால் இந்த தொடரில் ஏற்கனவே வீழ்த்திய  மும்பையை சந்திப்பதால் ராஜஸ்தான் வீரர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

இருந்தாலும் மும்பை  அணி சென்னை, ஐதராபாத் அணிகளை வீழ்த்திய உற்சாகத்தி–்ல்  இருக்கிறது. நட்சரத்திர வீரர்கள் மீண்டும் ஆட்டத்திறனை நிரூபிக்க தொடங்கியுள்ளது  அணியின் பலம்.அதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தினால் மும்பை அணி 14 புள்ளிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும். சென்னை அணியும் 14  புள்ளிகளுடன் இருந்தாலும் ரன் ரேட் அடிப்பையில் 2வது இடத்தில் உள்ள மும்பைதான் முன்னிலையில் உள்ளது. அதனால் இன்றைய வெறறி மும்பையை முதல் இடத்துக்கு  முன்னேற்றும். ஆனால் அதனை ராஜஸ்தான் அனுமதிக்குமா என்பதுதான் கேள்விக்குறி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: