மாஸ்டர்ஸ் கோல்ப் டைகர் வுட்ஸ் சாதனை

அமெரிக்காவில் நடந்த அகஸ்டா மாஸ்டர்ஸ் கோல்ப் தொடரில் நட்சத்திர வீரர் டைகர் வுட்ஸ் (43 வயது) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். அவர் இந்த தொடரில் கைப்பற்றிய 5வது மாஸ்டர்ஸ் பட்டம் இது. ஒட்டுமொத்தமாக அவர் வென்ற 15வது பெரிய பட்டம். கடந்த 2008 யுஎஸ் ஓபன் கோல்ப் தொடரில் கோப்பையை வென்றிருந்த டைகர் வுட்ஸ்... 10 ஆண்டு, 9 மாதம், 29 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனை வீரருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: