டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலி இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாகவும், பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. எனவே டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 3ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மதுரை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வைத்தது. அப்போது, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.

மேலும், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், டிக் டாக் செயலிக்கு எதிராக பிறப்பித்த தடை உத்தரவில் மாற்றம் செய்யக்கோரி டிக் டாக் தரப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோரிக்கை மனுவை வைத்தனர். அதில், இரண்டு தளங்கள் வழியாக இயங்குவதால் டிக் டாக் செயலியில் எந்த விதமான தவறும் நடக்கவில்லை என்றும், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினால் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்தியர்களின் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக டிக்-டாக் நிறுவனம் வீக்கம் அளித்துள்ளது. எனவே டிக் டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, டிக் டாக் செயலி மீதான தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. இதையடுத்து டிக் டாக் செயலியை நீக்குவது தொடர்பாக டிக் டாக் நிறுவனம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவை ஏப்.24ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலிகள் தளங்களிலிருந்து டிக் டாக் செயலியை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: