பிரேசில் நாட்டில் கார் விபத்தில் இரு டிரக்குகளுக்கு இடையே சிக்கிய இளைஞர் உயிருடன் மீட்பு

பிரேசில்: பிரேசில் நாட்டில் இரு டிரக்குகளுக்கு நடுவே அப்பளம் போல நொறுங்கிய காரில் சிக்கிய இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார். பெலோ ஹோரிசோன்ட் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு டிரக்கும் காரின் பின்பக்கம் மோதியதில் கார் இரண்டாக மடிந்து அப்பளம் போல நொறுங்கியது.

விபத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது அதில் சிக்கியிருந்தவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறு சிறு காயங்களுடன் இருந்த அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் காருக்குள் சிக்கியிருந்த இளைஞரை மீட்டு தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: