அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ தலைவர்கள் மோடி, அமித்ஷா தான் என திருவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ தலைவர்கள் மோடி, அமித்ஷா தான். பதவிக்காக ஓபிஎஸ், இபிஎஸ் எதையும் செய்வார்கள். ராஜதந்திரத்தால் முதல்வர் ஆனவர் எடப்பாடி. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை.