விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஜோதிகா மற்றும் சதீஷ்என்ற மாணவர்கள் கீழே கிடந்த 1 பவுண் தங்க நகையை தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர். இதனை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் இருவரும் பரிசு மற்றும் ஊக்கத்தொகை மாணவர்களுக்கு அளித்து பாராட்டினர்.
