ரஷ்யாவில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் உடல் கண்டுபிடிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் முழு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சைபீரியாவின் பனி மலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பனியில் உறைந்த நிலையில் குதிரைக் குட்டி ஒன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை ஆய்வு செய்த போது, அந்தக் குதிரைக் குட்டி 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த ஆய்வில் குதிரைக் குட்டியின் உடலுறுப்புகள் உறைந்து போனாலும் நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பல்வேறு முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: