தேர்தல் சட்டத்தை நான் மீறவில்லை : நடிகர் சுரேஷ்கோபி விளக்கம்

திருவனந்தபுரம் : சபரிமலை என்பது ஒரு இடத்தின் பெயர் தான் ,தேர்தல் சட்டத்தை நான் மீறவில்லை என்று  நடிகர் சுரேஷ்கோபி  விளக்கம்  அளித்துள்ளார். திருச்சூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் நடிகரும், மக்களவை எம்பியுமான சுரேஷ்கோபி திருச்சூர் தேக்கின்காடு   மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்  பங்கேற்று பேசும்போது, ‘‘இந்த தேர்தலில் சபரிமலை  ஐயப்பன் அலை வீசும்’’ என்று அந்த விவகாரம் பற்றி பேசினார். ஏற்கனவே சபரிமலை விவகாரத்தை பற்றி தேர்தல் பிரசாரத்தில் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையில், அதைப்பற்றி பேசியதால் சுரேஷ்கோபிக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்  அனுப்பினார்.

இந்நிலையில் சுரேஷ்கோபி திருச்சூர் மாவட்ட கலெக்டர் அனுபமாவிற்கு அனுப்பி உள்ள விளக்க கடிதத்தில், ‘‘மதமோதல்களை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யக்கூடாது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் உத்தரவாகும். நான் அந்த உத்தரவை மீறவில்லை. தெய்வத்தின் பெயரையோ மத அடையாளத்தையோ பயன்படுத்தி நான் பிரசாரம் செய்யவில்லை. சபரிமலை என்பது ஒரு இடத்தில் பெயர்தான். சபரிமலை கோயில் என்றோ, அய்யப்ப சாமி என்றோ நான் பிரசாரத்தில் கூறவில்லை. இது தொடர்பாக கூடுதல் விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை’’ என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: