திகார் சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருள் தமிழக காவலர் பணிநீக்கம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப்பொருள் சப்ளை செய்தது உறுதியானதை அடுத்து அதற்கு உடந்தையாக இருந்த தமிழக சிற்பபு காவலரை பணிநீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.      தலைநகர் டெல்லியில் உள்ள திகார் சிறை என்பது மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும்.  இது, நாட்டில் உள்ள மற்ற மாநில சிறைகளை விட அதிநவீன சொகுசு வசதி கொண்டதாகும். இப்படிப்பட்ட சிறையில்,   கடந்த சில மாதங்களாகவே செல்போன், கஞ்சா உட்பட பல போதைப் பொருட்கள் சகஜமாக புழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆரம்பத்தில் மெத்தனம் காட்டிய சிறைத்துறை அதிகாரிகள் தற்போது அதிரடியாக பல்வெறு சோதனைகளை நடத்தியுள்ளனர். அதில், கைதிகளிடம் 15க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்த இத்தகைய செயலுக்கு யார் காரணம் என்ற கோணத்தில் முதலாவதாக விசாரணையை தொடங்கிய சிறைத்துறையினர் அங்கிருக்கும் அனைத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதுதான் தற்போது பூதாகரமாகி உள்ளது. அதில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு காவல் படையை சேர்ந்த அன்பரசன் என்பவர் செல்போன், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் ஆகியவற்றை சப்ளை செய்தது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் அவர் இத்தகைய செயலுக்காக வசதி படைத்த மற்றும் சாதாரன கைதிகள் வரை சுமார் ரூ.25ஆயிரம் முதல் 1லட்சம் வரை கையூட்டாக அவர் வாங்கியுள்ளதும் முதல்கட்ட விசாரணையில் தெரியந்துள்ளது. இதையடுத்து தமிழக காவலர் அன்பரசனை பணிநீக்கம் செய்து திகார் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும் இதுபோன்ற செயலுக்கு உயர் அதிகாரிகள் யாராவது அன்பரசனுக்கு உடந்தையாக இருந்திருப்பார்களோ? என்ற கோணத்திலும் தற்போது திகார் சிறைத்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: