கொல்லப்பட்ட கசோகி பிள்ளைகளுக்கு பல கோடிக்கு சொத்து வழங்கியது சவுதி அரசு

வாஷிங்டன்: துருக்கியில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் கசோகியின் வாரிசுகளுக்கு கோடிக்கணக்கான சொத்தை சவுதி அரசு வழங்கியுள்ளது.சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி (59). இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். இவர் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின்  மன்னராட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்.2ல் துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மர்மமாக கொலை  செய்யப்பட்டது தெரியவந்து பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், கசோகியின் வாரிசுகளுக்கு சவுதி அரேபிய அரசு சொத்துக்கள் மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.கசோகியின் 2 மகன்கள், 2 மகள்களுக்கும் ஜெட்டா நகரில் ₹27 கோடியே 67 லட்சம்  மதிப்புள்ள வீடுகளை சவுதி அரசு வழங்கியுள்ளது., இது தவிர மாதம் ₹7 லட்சம் பணத்தையும் வழங்க உள்ளது எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: