லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் நிப்சி ஹூலஸ்(33). இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆயத்த ஆடை கடையும் நடத்தி வருகின்றார். இவர் ெவளியிட்ட விக்டரி லேப் என்ற இசை ஆல்பம் இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பமாக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தனது கடைக்கு வெளியே நின்றிருந்த நிப்சி மீது நேற்று மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான். பலமுறை சுட்டதில் குண்டு பாயந்–்த நிப்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.