ஐபிஎல் டி20: டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் XI பஞ்சாப்

மொகாலி: ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் XI பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டெல்லி அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி 3 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி  14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி கட்டத்தில் அபாரமாக பந்துவீசிய பஞ்சாப் அணி வீரர் சாம் குரான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: