ராஜஸ்தான் அணியின் 199 ரன் இலக்கை எட்டி சன்ரைசர்ஸ் அணி அசத்தல் வெற்றி: நடப்பு சீசனில் சஞ்சு சாம்சன் முதல் சதம்

ஐதராபாத்: ராஜஸ்தான் அணியுடான  ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் வீணானது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்க்யா ரகானே முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில் ஷாகிப் ஹசன், தீபக் ஹூடாவுக்கு பதிலாக கேன் வில்லியம்சன், ஷாபாஸ் நதீம் இடம் பெற்றனர். வில்லியம்சன் கேப்டன் பொறுப்பேற்றார்.ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக ரகானே, பட்லர் களமிறங்கினர். பட்லர் 5 ரன் மட்டுமே எடுத்து ரஷித் கான் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து ரகானேவுடன் சஞ்சு சாம்சன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். இவர்களைப் பிரிக்க சன்ரைசர்ஸ் வீரர்கள் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை.

ரகானே 38 பந்திலும், சாம்சன் 34 பந்திலும் அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்து அசத்தியது. ரகானே 70 ரன் (49 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி நதீம் பந்துவீச்சில் பாண்டே வசம் பிடிபட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாம்சன், நடப்பு சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார். ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. சாம்சன் 102* ரன் (55 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 20 ஓவரில் 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. துவக்க வீரர்களாக டேவிட் வார்னர்,  பேர்ஸ்டாவ் இருவரும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி 10 ஒவர்களுக்கு முன்னதாகவே 100 ரன்களை கடந்தது. ஸ்கோர் 110ஐ எட்டியபோது வார்னர் குல்கர்னியிடம் கேட்சி கொடுத்து அவுட் ஆனார். அவர் 37 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 9 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 69 ரன்கள் எடுத்தார்.

அடுத்த ஓவரிலேயே பேர்ஸ்டவ்(45) குல்கர்னியிடம் கேட்ச் ஆனார். அவரது விக்கெட்டை ஸ்ரேயாஸ் கோபால் வீழ்த்தினார். இந்த ஜோடி அவுட் ஆனதால் ரன்வேகம் சற்று மந்தமானது. அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 14 ரன் எடுத்த நிலையில் உனத்கட் பந்தில் திரிபாதியி–்டம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.அவரை தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் மட்டை வேகமாக சூழற்ற 15 பந்தில் 3 சிக்சர், 1 பண்டரி விளாசி 35 ரன்னில் ஆட்மிழந்தார். அப்போது அணியின் ஸ்கோரி 15.3 ஓருவக்கு 167 ஆக இருந்தது. அடுத்தவந்த மணிஷ் பாண்டே 4 பந்தை சந்தித்த நிலையில் 1 ரன்னுக்கு நடையை கட்டினார். ஆனால், அதன்பின் யூசுப் பதானும், ரஷீத் கானும் நம்பிக்கையுடன் ஆடினர். 8 பந்துக்கு 9 ரன்கள் தேவை என்கிற நிலையில், ரஷீத்கான் அடுத்தடுத்த பந்தில்  பவுண்டரி, சிக்சர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.  இதனால் ஒரு ஒவர் மீதமிருக்க 5 விக்கெட் வித்தியாசத்தில்  ஐதராபாத்  சன்ரைசர்ஸ் அணி இலக்கை எட்டி அசத்தியது.  பவுலி–்ங்கில் கோபால் 3 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், உனத்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ரஷித் கானுக்கு வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: