திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட், பாஜ இடைய ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.ராகுல் காந்தி நேற்று கோழிக்கோடு மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அங்குள்ள கொயிலாஞ்சியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: கேரளாவில் மார்க்சிஸ்ட், பாஜ இடையே ரகசிய உடன்படிக்ைக உள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மோடி அடிக்கடி கூறி வருகிறார்.அவர் எப்போதாவது மார்க்சிஸ்ட் இல்லாத பாரதம் என்று கூறியிருக்கிறாரா? காங்கிரசை பாஜ அழிக்க முயற்சிப்பதற்கு இதுதான் காரணமா?. தேவையில்லாத அரசியல் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு பதிலாக வளர்ச்சி திட்டங்களை பேசவே காங்கிரஸ் விரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார். …
The post கேரளாவில் மார்க்சிஸ்ட் – பாஜ ரகசிய உடன்பாடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
