சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

ஈபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில், இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தியது.மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. அடுத்து தென் கொரியாவுடன் நடந்த 2வது லீக் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்த நிலையில், 3வது லீக் ஆட்டத்தில் நேற்று மலேசிய அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா சார்பில் சுமித் (17வது நிமிடம்), சுமித் குமார் (27’), வருண் (36’), மன்தீப் (58வது நிமிடம்) ஆகியோர் அபாரமாக கோல் போட்டனர்.

மலேசிய வீரர்கள் ராஸி (21’), பர்கான் (57’) கோல் அடித்தனர். அனைத்து அணிகளும் தலா 3 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் தென் கொரியா, இந்தியா தலா 7 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. மலேசியா, கனடா அணிகள் தலா 6 புள்ளிகள் பெற்று 3வது, 4வது இடத்தில் உள்ளன. ஜப்பான் (0), போலந்து (0) பின்தங்கியுள்ளன. 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று கனடா அணியை சந்திக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: