ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு

புதுடெல்லி: ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன் பின் வழக்கு விசாரணைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து மீண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இறுதியாக கைது செய்வதற்கான தடை மார்ச் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர்களை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல், காங்கிரஸ் ெபாதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீதான நிதி மோசடி வழக்கில், அவரை கைது செய்வதற்கான தடையை நாளை வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: