முலாயம்சிங், அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி : சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவ்  மற்றும் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம்சிங் யாதவ்  மற்றும் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை சி.பி.ஐ. 2007 ம் ஆண்டு பதிவு செய்தது. இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில்  உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 2 வாரங்களுக்குள் பதில் தர வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தனது முழு தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: