மக்களவை தேர்தலையொட்டி பதுக்கல் தடுக்க நடவடிக்கை மதுபான வாகனங்களை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க வேண்டும்

வேலூர்:  தமிழக அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் துறைகளில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை முக்கியமானதாக இருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வழங்க மதுபாட்டில்கள் பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சிவில் சப்ளை குடோன்களில் நேரடியாக மதுபாட்டில்களை கடத்தி சென்று பதுக்கி வைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கலை தடுக்க விதிமுறைகளை சரியாக  கடைப்பிடிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டாஸ்மாக் மதுபாட்டில்களை மொத்தமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு யாரும் கொண்டு செல்லக்கூடாது. மதுவிலக்கு சட்டம் பிரிவு 22சியின் படி மதுபாட்டில்களை குடோன்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர்த்து வேறு வழித்தடத்தில் மதுபாட்டில்களை வாகனங்களில் ஏற்றிச் செல்லக்கூடாது. மேலும் அதிகாரிகள் கேட்கும் நேரத்தில் உரிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தைவிட காலதாமதமாக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டாலும் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: