தேர்தலில் போட்டியில்லை யாருக்கும் பிரசாரமும் இல்லை: நடிகர் சல்மான் கான் அறிவிப்பு

மும்பை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் சல்மான் கான் அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு எதிராக நடிகர் சல்மான் கானை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி சல்மான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘நான் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறப்படுவது வெறும் வதந்தி. நான் தேர்தலில் போட்டியிடவில்லை. அதே போன்று எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதும் இல்லை’’ என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: