மெயின் ரோடுகளில் மட்டும் தணிக்கை செய்கிறீர்கள் குறுக்கு பாதைகளில் டூவீலர்களில் பணம் கடத்தல்

கும்பகோணம்: கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் வீராச்சாமி தலைமை வகித்தார். கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் செலவினங்களுக்கான தேர்தல் பார்வையாளர் சதீஷ் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும் கும்பகோணம் ஆர்டிஓவுமான வீராச்சாமி பேசுகையில், தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டுதேர்தல் நடத்தும் அதிகாரிகள் பணிகளை கவனத்துடன் செய்ய வேண்டும். வாகனங்களை சோதனை செய்யும்போது மற்றவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

 வாகன சோதனையில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் நகரின் முக்கிய சாலைகளில்  மட்டுமே ஈடுபடுவதாக தெரிகிறது. ஆனால் நகரில் உள்ள பல குறுக்கு தெருக்களின் வழியே பணத்தை எடுத்து செல்வதாக தகவல்கள் வருகிறது. மேலும் கார் போன்ற வாகனங்களில் இல்லாமல் சிறிய மொபட்டுகளிலும் பணம் கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே ஆய்வில் ஈடுபடும் அதிகாரிகள் சந்தேகத்துக்கு இடமாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு செய்ய வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் குறித்து விசாரிக்க வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: