அதிமுக கூட்டணியில் சேர பாமக ரூ.500 கோடி வாங்கியதா?.... பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு

1. அதிமுகவை தொடர்ந்து பாமகவை விமர்சித்து வந்த நிலையில் திடீரென, நீங்கள் கூட்டணியில் சேர்ந்ததை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக நினைக்க மாட்டார்கள். பாமகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக ஜனநாயக கடமை ஆற்ற ஆளும் கட்சி மீது விமர்சனம் வைப்பது புதிதல்ல. பாமக ஆதரவுடன் திமுக ஆட்சி நடந்த போதே நாங்கள் விமர்சனம் செய்துள்ளோம்.

2. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும், முதல்வர், துணை முதல்வர் இப்படி தாங்குவது ஏன்?

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி டாக்டர் ராமதாஸ் தான். எந்த விதமான சட்டமன்ற, நாடாளுன்றத்திற்கு செல்லாமல், அமைச்சராகாமல் சமூகப்பணி ஆற்றி வருகிறார். அதை அவர்கள் மதிக்கின்றனர். பாராட்டுகின்றனர். திமுக, அதிமுகவிற்கு அடுத்தப்படியாக வாக்கு வங்கி கொண்டது பாமக தான். ெபரிய கட்சி என்பதால் பாமகவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது தவிர்க்க முடியாது. பாமக-அதிமுக உடன் கூட்டணி அமைத்த பிறகு, தமிழக அரசியல் சூழ்நிலையே மாறி விட்டது.

3. பாமகவின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலில் சரிந்து வருகிறதே?

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனியாக போட்டியிட்டு 25 லட்சம் வாக்குகள், அதாவது 6 சதவீதம் வாக்குகள் வாங்கியுள்ளோம். மக்கள் நல  கூட்டணி உருவாகாவிட்டால் மிகப்பெரிய வாக்கு வங்கியை பாமக பெற்றிருக்கும்.

4. அதிமுக கூட்டணியில் பாமக வருவதற்கு ரூ.500 கோடி பணம் வாங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனரே?

இது முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டு. பேரம் செய்து கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் பாமகவிற்கு இல்லை. தமிழ்நாட்டில் பாமக ஒரு அணியோடு சேர்கிறது என்றால் வெற்றி கூட்டணி என்கிற தோற்றம் வரும். அதை முறியடிக்க இப்படி சொல்கிறார்கள். பாமக கூட்டணி வைத்தால், இவர்களுக்கென்ன காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை. அரசியல் நாகரீகம் இல்லாத தரம் கெட்ட விமர்சனம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: