மருத்துவமனையில் முஷாரப் அனுமதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் திடீர் உடல் குறைவினால் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கடந்த 1999 முதல் 2008 வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தார். பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தை தற்காலிக ரத்து செய்ததாக அவர்  மீது குற்றம்சாட்டு வழக்குப் பதியப்பட்டது. இதில் இருந்து தப்ப சிகிச்சையை காரணம் காண்பித்து துபாய் சென்ற முஷாரப், பாதுகாப்பு மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி 2016ம் ஆண்டு மார்ச் முதல் அங்கேயே வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவினால் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: