ஆளும் மஜத பொதுச்செயலாளர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தாவல்: தேவகவுடா, குமாரசாமி அப்செட்

பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த  டேனிஷ் அலி, திடீரென கட்சி மாறி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளது  முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர்  குமாரசாமி உள்பட கட்சி தலைவர்களுக்கு  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர்  டேனிஷ் அலி. கர்நாடகாவில் இப்போதைய காங்கிரஸ், மஜத கூட்டணியை உறுதி செய்தவரும் இவர்தான்.டேனிஷ்  அலியின் செயல்பாடுகளை பலரிடம் தேவகவுடா பாராட்டி பேசிவந்தார்.

இந்நிலையில்  நேற்று மஜதவில் இருந்து விலகிய டேனிஷ் அலி, உபி முன்னாள்  முதல்வர் மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளார்.  டேனிஷ் அலியின் இந்த திடீர் முடிவு தேவகவுடா, முதல்வர்  குமாரசாமி  ஆகியோருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கட்சி மாறுவது குறித்து  எந்த காரணமும் இல்லாத நிலையில் தேர்தல் சமயத்தில் டேனிஷ்அலி கட்சி மாறியது  எதிர்பார்க்காத அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில மஜத  தலைவர் விஸ்வநாத் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது,  டேனிஷ் அலி கட்சி மாறியது ஆகியவை மஜதவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: