புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

புழல்: சென்னை புழல் மத்திய சிறைச்சாலை விசாரணை பிரிவில் உள்ள கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக சிறை துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சிறையில் உள்ள சோதனை கண்டறியும் குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கைதியின் அறையில் உள்ள கழிவறையில் சோதனை செய்ததில் ஒரு செல்போன், சிம்கார்டு, பேட்டரி ஆகியவை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். விசாரணையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஒற்றைவாடை தெருவை சேர்ந்த ருக்மாங்கதன் (36) என தெரிந்தது.

இவர், சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், 2016ல் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளிவந்த அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில், ருக்மாங்கதன் கடந்த பிப்ரவரி 28ம் தேதி எழும்பூர் கோர்ட்டில் ஆஜரானார். அன்று முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக, ஜெயிலர் உதயகுமார் புகாரின்படி, புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: