திண்டுக்கல்லில் கொளுத்துது வெயில் நுங்கு விற்பனை அமோகம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வெயில் வாட்டி வதைப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் தினமும் 100 டிகிரியை தாண்டியுள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகள், கண்மாய்கள், நீர்நிலைகள் தற்போது வறண்டு கிடக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதால் பூமியில் வெப்பம் அதிகமாக உள்ளது. திண்டுக்கல் மலைக்கோட்டையில் அடிக்கும் வெயில் நகரில் பிரதிபலித்து வெப்பத்தை அதிகமாக்கி வருகிறது. நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் புழுக்கம் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இரண்டு நேரம் குளிப்பதற்கு தண்ணீரும் கிடைப்பதில்லை.

மேலும் வெப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் குளிர்பானம் மற்றும் இயற்கை பானங்களை விரும்பி அருந்தி வருகின்றனர். இதனிடையே தற்போது திண்டுக்கல்லில் பல பகுதிகளில் வெப்பத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனை பல இடங்களில் நடக்கிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்துார், வடமதுரை உட்பட பல இடங்களில் பனை மரங்கள் உள்ளன. இவற்றில் இருந்து நுங்கு வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் ரூ.10க்கு இரண்டு முதல் மூன்று நுங்கு விற்கப்படுகிறது. வெயில் அதிகமாகி வருவதால் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.

நுங்கு உடல் வெப்பத்தை சீராக்குவது மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும் மினரல்கள் சத்துக்களை தர வல்லது. இதனால் பலர் நுங்கு வாங்கிச் செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: