காட்டு யானை அட்டகாசம் : விவசாயிகள் வேதனை

பந்தலூர்: பந்தலூர் அருகே கையுன்னி பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பந்தலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு  பல இடங்களில் காட்டு தீ  ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது  வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று சேரம்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட கையுன்னி அரசு பள்ளி அருகே எலியாஸ் என்பவரின் தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தது. இப்பகுதியில் முதல் முறையாக யானை கூட்டம் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சேரம்பாடி வனச்சரகர் சின்னத்தம்பி மற்றும் வனத்துறையினர் சேதம் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: