அமெரிக்க ஓட்டலில் தங்கி இருந்தபோது குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்து ரசித்த இந்திய பைலட்: வலை வைத்து பிடித்தது அமெரிக்க போலீஸ்

புதுடெல்லி: அமெரிக்காவில் குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்த இந்திய பைலட்டை கைது செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது அமெரிக்க போலீஸ்.டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் திங்கட்கிழமை சென்றது. சான் பிரான்சிஸ்கோ நகரில் விமானம் தரையிறங்கியதும், அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் ஏர்  இந்தியா பைலட்டை திடீரென சுற்றி வளைத்தனர். அவர் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார். பயணிகளும் குழப்பம் அடைந்தனர். அப்போது, பைலட்டின் கைகளில் போலீசார் விலங்கையும் மாட்டினர்.

அவர் குழந்தைகள் ஆபாச படத்தை டவுன்லோடு செய்து பார்த்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டினர். கைது செய்யப்பட்ட இந்திய பைலட் வழக்கமாக அமெரிக்க விமானத்தை இயக்குபவர். இவர் அமெரிக்காவில் உள்ள  ஓட்டல்களில் தங்கியிருந்தபோது, அங்கு இன்டர்நெட் மூலம் குழந்தைகள் ஆபாச படத்தை டவுன் லோடு செய்து பார்த்து ரசித்துள்ளார். இதை கடந்த 2 மாதமாக எப்பிஐ அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். அமெரிக்க சட்டப்படி 18 வயதுக்கு குறைவானவர்களின் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது குற்றம். இதனால், இந்திய பைலட் மீது அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்திய பைலட்டின் பாஸ்போர்ட்டையும்  பறிமுதல் செய்தனர். அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: