மிசோரம் ஆளுநர் பொறுப்பேற்பு

ஐசால்: மிசோரம் மாநில ஆளுநராக ஜெகதீஷ் முகி நேற்று பொறுப்பேற்றார்.  மிசோரம் மாநில ஆளுநராக இருந்த கும்மனம் ராஜசேகரன், கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியை மிசோரம் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். அதன்படி, மிசோரம் ஆளுநராக நேற்று அவர் பொறுப்பேற்றார். அவருக்கு கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி நெல்சன் சைலோ பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மிசோரம் மாநிலத்தின் லோக் ஆயுக்தா அமைப்பின் முதல் தலைவராக லால்சாதா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மிசோரம் ஆளுநர் ஜெகதீஷ் முகி, ராஜ்பவனில் நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மிசோரம் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஜெகதீஷ் முகி உரை நிகழ்த்துகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: