போதையில் கார் ஓட்டி விபத்து ரியல் எஸ்டேட் அதிபர் கைது : துப்பாக்கி பறிமுதல்

சென்னை: நந்தம்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேதா அருள் (54). இவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் காரை ஓட்டி சென்று கிண்டி மேம்பாலம் அருகே 2 கார்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். போலீசார், அவரது காரை பறிமுதல் செய்து வேதாவை கைது செய்தனர். மேலும், அவரது காரில் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

* சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஈரோடு மாவட்டம், கணபதி பாளையத்தை சேர்ந்த பாலாஜி (23) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 10 சவரன் நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

* புரசைவாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் தலைமை காவலர் இளங்கோவன் (48), இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் பெருங்களத்தூரில் கோயிலுக்கு சென்றபோது, ஆட்டோவில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை தட்டிகேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவர்கள் இளங்கோவனை சரமாரியாக தாக்கினர். பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து பெருங்களத்தூரை சேர்ந்த பாஷா (22), புதுப்பெருங்களத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் (21), சாந்தகுமார் (23) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

* படாளம் ராமானுஜம் கார்டன் தெருவில் மளிகைக்கடை நடத்தி வரும் தலைமை காவலரின் மனைவி அமுதா (42) கடையில் இருந்த 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

* விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரவேல் (19), கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பேக்கரியில் வேலை ெசய்து வருகிறார். நற்று முன்தினம் இரவு இவரின் செல்ேபானை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருவேற்காட்டை சேர்ந்த விக்கி (எ) பார்த்திபன் (20), கார்த்திக் (21) என்று தெரியவந்தது.

* புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் கிஷ்னெத் (24). இவரது கணவர் கவுதம். இவர்களுக்கு அனுஷ்கா (4) என்ற மகள் உள்ளார். குடும்ப தகராறில் கிஷ்னெத் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.

* புளியந்தோப்பு 4வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (45), தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். இவர், நேற்று முன்தினம் இரவு மீன்பாடி வண்டியில் தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு புளியந்தோப்பு 3வது தெரு வழியாக சென்றபோது அங்கு வந்த 4 பேர், பெருமாளை சரமாரி வெட்டிவிட்டு தப்பினர். அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* ஆந்திரவில் இருந்து  தமிழகத்திற்கு 2 லாரிகளில் கடத்திவந்த தடை செய்யப்பட்ட 78 டன் சிலிக்கான்  மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, லாரி டிரைவர்களான தஞ்சாவூரை  சேர்ந்த முனிகிருஷ்ணன் (45),  திருவள்ளூரை சேர்ந்த முரளி (35),  ஊத்துக்கோட்டையை சேர்ந்த லாரி கிளினர்களான ரவி (30), உதயகுமார் (25)  மற்றும் லாரியில் இருந்த ஊழியர்கள் பொன்னேரியை சேர்ந்த நடராஜ் (30).  சந்திரன், (28) ஆகிய 6 பேரை, போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: