மாணவி பலாத்காரம் இமாம் கைது

திருவனந்தபுரம்: கேரளாவின் நெடுமங்காடு  அருகே உள்ள தொளிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷெபீக் அல் காசிமி. இவர்  தொளிக்கோடு பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றி வந்தார். கடந்த 3 வாரங்களுக்கு  முன் இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு 10ம் வகுப்பு மாணவியை,  காரில் கடத்தி ெசன்று பலாத்காரம் செய்தார். இதுகுறித்து  நெடுமங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இமாம்  தலைமறைவானார். பல்வேறு இடங்களில் போலீசார் அவரை தேடி வந்தனர். இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய  விசாரணையில் இமாம் மதுரையில் தலைமறைவாக இருப்பது தெரிய  வந்தது. இதையடுத்து நேற்று மதுரை விரைந்த தனிப்படை போலீசார்  அவரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: