மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கப்படும்: பிரான்ஸ்

பாரிஸ்: ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது ஐ.நா சபையால் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா, அந்த முயற்சிகளை தடை செய்துவிட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மசூத் அசாரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க செய்யும் முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஐ.நா சபையில் பிரான்ஸ் இதற்கு அழுத்தம் கொடுக்கும் என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் ஜீக்லர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவன் இன்னும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படாமல் இருப்பது அர்த்தமற்றது என்று பிரான்ஸ் தூதர் கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினராக இருந்து வருகின்றன. அதன்படி இந்தப் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைபொறுப்பு மாதம் தோறும் ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்ப சுழற்சி அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும். அதன்படி மார்ச் மாத்திற்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவி பிரான்ஸ் நாட்டிற்கு கிடைக்கும். அதனால் பிரான்ஸ் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியேற்றவுடன் மசூத் அசார் மீதான தடை தீர்மானத்தை இந்நாடு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: